இந்தியாவில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு 1 அரசு மருத்துவர் மட்டுமே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்று உலக சுகாதார அமைப்பு விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது

மத்திய சுகாதார புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 581 ஆக இருந்ததாகவும், 2018 ஆம் ஆண்டு 41 ஆயிரத்து 371 ஆக குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள மக்கள் தொகையின்படி, 10 ஆயிரத்து 926 பேருக்கு 1 அரசு மருத்துவர் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது.

இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.28 சதவிகிதத்தை மட்டுமே செலவிடுகிறது. 2009 – 10 ஆம் ஆண்டுகளில் 621 ரூபாயாக இருந்த தனிநபருக்கான பொதுச் சுகாதாரச் செலவு, 2017- 18 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்து 675 ரூபாயாகவே உயர்ந்துள்ளது. இது சுகாதாரத் துறையை மேம்படுத்த அதிக நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதை காட்டுகிறது.

நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மருத்துவ கல்லூரி அமைக்க விதிக்கப்படும் நிபந்தனைகளை தளர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here