இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45-ஆயிரத்தை கடந்தது

With 38,772 new #COVID19 infections, India's total cases rise to 94,31,692

0
109

இந்தியாவில் இன்று(திங்கள்கிழமை) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 38,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,31,692 ஆக உயர்ந்தது.

நாட்டில் புதிதாக 443 பேர் பலியாகியுள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 1,37,139 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 45,333 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைதோர் எண்ணிக்கை 88,47,600 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,53,956 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 93.81% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.74% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 8.76.173 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 14,03,976 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here