இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,000-ஐ தாண்டியது

Coronavirus Pandemic LIVE Updates: The total number of coronavirus cases in India moved higher to 23,077, figures released by the health ministry showed today morning as 1,684 fresh Covid-19 cases were reported in the past 24 hours. The death toll from coronavirus rose to 718 as 37 casualties were reported in 24 hours.

0
108

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று(வியாழக்கிழமை) காலை வரை நாட்டில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 681 ஆக இருந்தது.  4,258 பேர் குணமடைந்தும், 16,454 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) 718 ஆக உயர்வடைந்து உள்ளது. 

இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 4,749 பேர் குணமடைந்தும், 17,610 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393ல் இருந்து 23,077 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்ட்டிராவில் 6,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  283 பேர் பலியாகி உள்ளனர்.  இது நேற்று 269 ஆக இருந்தது.  840 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அடுத்த இடத்தில் 2624 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 112 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், 258 பேர் குணமடைந்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here