இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,665-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22,252 பேர் புதிதாக  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 20,160 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 467 உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,39,947 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,515 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,11,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,026 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,15,262 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,14,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,571 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 66,571 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,00,823 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,115 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 72,088 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 12,160 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 7,882 பேர் குணமடைந்தது.

பீகாரில் 12,125 பேருக்கு பாதிப்பு; 97 பேர் பலி; 8,997 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 489 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 401 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 3,305 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 2,66,671 பேர் குணமடைந்தது.

கோவாவில் 1,813 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1061 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 36,772 பேருக்கு பாதிப்பு; 1,960 பேர் பலி; 26,315 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 17,504 பேருக்கு பாதிப்பு; 276 பேர் பலி; 13,335 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 1,680 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,219 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 5,622 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 3341 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 20,688 பேருக்கு பாதிப்பு; 461 பேர் பலி; 16,278 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 2,841 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 2068 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 1005 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 836 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,390 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 734 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 80 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 197 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி;3 பேர் குணமடைந்தது.

நாகாலாந்தில் 590 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 231 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 9526 பேருக்கு பாதிப்பு; 38 பேர் பலி; 6,486 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 802 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 331 பேர் குணமடைந்தது.

பஞ்சாப்பில் 6,491 பேருக்கு பாதிப்பு; 169 பேர் பலி; 4,494 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 3161 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 2,5864 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 25,317 பேருக்கு பாதிப்பு; 401 பேர் பலி; 10,527 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 8,675 பேருக்கு பாதிப்பு; 138 பேர் பலி; 5,318 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 25,733 பேருக்கு பாதிப்பு; 306 பேர் பலி; 14,781 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 22,987 பேருக்கு பாதிப்பு; 779 பேர் பலி; 15,235 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 28,636 பேருக்கு பாதிப்பு; 809 பேர் பலி; 19,109 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 20,019 பேருக்கு பாதிப்பு; 239 பேர் பலி; 8920 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 270 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 92 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 15,284 பேருக்கு பாதிப்பு; 617 பேர் பலி; 11,579 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 1077 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 763 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 141 பேருக்கு பாதிப்பு; 74 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

தாதர் நகர் ஹவேலியில் 297 பேருக்கு பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 125 பேருக்கு பாதிப்பு; 65 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here