இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு

In the last 24 hours, 12 lakh tests were conducted across the country which is an all-time record high. Total #COVID19 tests more than 6.37 crore: Ministry of Health

0
384

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 92,605பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று(சனிக்கிழமை) மேலும் 1,133 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டி, 54,00,620 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 10 லட்சத்து 10 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 43 லட்சத்து 03 ஆயிரத்து 044 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு நாள் பாதிப்பைக் காட்டிலும் அதிகமாகும். மொத்த கொரோனா பாதிப்பில் இது 79.28 சதவீதமாகும். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,133 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கொரோனா உயிரிழப்பு 86,752 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.61 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் 10,10,824 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 19.10 சதவீதமாகும்.

இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 6,36,61,060 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 12,06,806 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவதில், அமெரிக்காவை விஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதாவது குணமடைந்தோா் விகிதம் 79.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் குணமடைந்த 94,612 பேரில் 90 சதவீதம் போ் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்தவா்கள் என்று சுகாதராத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here