இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,56,183-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 15,968 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 465 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 14,476 பேர் உயிரிழந்த நிலையில் 2,58,685 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,010 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6531 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 69,631பேர் குணமடைந்துள்ளனர். இந்த  வரிசையில் நேற்று முன்தினம் வரை 3-வது இடத்தில் இருந்த டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 66,602 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,301 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 39,313 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 64,603 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 35,339 பேர்  குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன் 23 வரை 73,52,911 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,15,195 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 5831 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 3762 பேர் குணமடைந்தது.

பீகாரில் 8153 பேருக்கு பாதிப்பு; 56 பேர் பலி; 6104 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 418 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 322 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 2362 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 1553 பேர் குணமடைந்தது.

கோவாவில் 909 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 205 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 28,371 பேருக்கு பாதிப்பு; 1,710 பேர் பலி; 20,513 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 11,520 பேருக்கு பாதிப்பு; 178 பேர் பலி; 6,498 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 1,259 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 807 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 3,451 பேருக்கு பாதிப்பு; 22 பேர் பலி; 1,809 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 15,627 பேருக்கு பாதிப்பு; 365 பேர் பலி; 12,213 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 2,185 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 1,520 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 932 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 148 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 921 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 258 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 46 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 142 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.

நாகாலாந்தில் 330 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 141 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 5,470 பேருக்கு பாதிப்பு; 17 பேர் பலி; 3,988 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 402 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 165 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 4,397 பேருக்கு பாதிப்பு; 105 பேர் பலி; 3,047 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 2,535 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 1,602 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 9,721 பேருக்கு பாதிப்பு; 150 பேர் பலி; 6,004 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 6,236 பேருக்கு பாதிப்பு; 87 பேர் பலி; 3,642 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 9,553 பேருக்கு பாதிப்பு; 220 பேர் பலி; 4,224 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 14,728 பேருக்கு பாதிப்பு; 580 பேர் பலி; 9,218 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 18,893 பேருக்கு பாதிப்பு; 588 பேர் பலி; 12,116 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 10,002 பேருக்கு பாதிப்பு; 119 பேர் பலி; 4,599 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 148 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 12,261பேருக்கு பாதிப்பு; 525 பேர் பலி; 9,335 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 775 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 443 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 50 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 40 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 120 பேருக்கு பாதிப்பு; 29 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 79 பேருக்கு பாதிப்பு; 29 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here