இந்தியாவில், கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரை 13 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் சிஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் தொலைதொடர்பு, ஆட்டோமொபைல், கட்டுமானம், ஐடி போன்ற துறைகளில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 9.27 புள்ளிகள் உயர்ந்து 33,927.21 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 13.55 புள்ளிகள் உயர்ந்து 10,434.95 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.93ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்