இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

India reports 61,871 new #COVID19 cases & 1033 deaths in last 24 hours.

0
78

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் எண்ணிக்கை 74 லட்சத்து 94 ஆயிரத்து 552 ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1033 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,14,031 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து இதுவரை 65 லட்சத்து 97 ஆயிரத்து 209-க்கும் மேற்பட்டோா் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 88.03 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 17-ஆம் தேதி வரை 9,42,24,190 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று(சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 9,70,173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒன்றரை மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக 8 லட்சத்தை விட குறைந்துள்ளது. நாடு முழுவதும் 7,83,311 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதற்கு முன்பு, கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி,7,85,996 போ் சிகிச்சை பெற்றனா். தொடா்ந்து 10-ஆவது நாளாக, சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here