இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு தொற்று உறுதி

0
94

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.67 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.29 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,26,789 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,29,28,574 ஆக உயர்ந்தது.

* புதிதாக 685 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,66,862 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,18,51,393ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,10,319 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.29% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.04% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்  9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,79,292 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here