இந்தியாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.66 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.28 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,15,736 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்தது.

* புதிதாக 630 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,66,177 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,92,135 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,43,473 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 92.11% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.30% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 6.59% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்  8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33,37,601 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here