இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம்

India reports single-day spike of 56,282 new #COVID19 cases and 904 deaths in the last 24 hours.

0
134

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.64  லட்சத்தை தாண்டியுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 904 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19,64,537 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13.28 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5.95 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 40,699 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 2,21,49,351-  பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 6,64,949   மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக  இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here