இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

India's #COVID19 case tally crosses 50-lakh mark with a spike of 90,123 new cases & 1,290 deaths in last 24 hours.

0
60

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் கொரோனாவிலிருந்து மீண்டதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39.42 லட்சத்தை தாண்டியது. 

மேலும், புதிதாக 90,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 90,123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,20,360 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,290 பேர் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 82,066 ஆக அகரித்துள்ளது. 

கொரோனா பாதித்தவர்களில் தற்போது 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 39,42,361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் இதுவரை 5,94,29,115 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 11,16,842 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here