இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்திற்கான கொரோனா விபரம்

India's COVID19 tally crosses 19-lakh mark with single-day spike of 52,509 new cases & 857 deaths in the last 24 hours.

0
97

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது.

இன்றைய(புதன்கிழமை) நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 857 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 39,795-ஆக அதிகரித்துள்ளது.

5,86,244 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,82,216 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒருநாளில் மட்டும் 51,706 பேர் குணமடைந்தனர். இதனால் 67.19%-ஆக குணமடைந்தோர் விகிதம்உள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 30.72%-ஆக உள்ளது. இறப்புவிகிதம் 2.09%-ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,458 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 16,142 பேர் உயிரிழந்த நிலையில்,2,99,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 55,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,08,784 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,349-ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here