இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 14,506 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,33,345 ஆக உயர்ந்தது.

* புதிதாக 30 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,077 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,574 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,08,666 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.56% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.23% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,602 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இந்தியாவில் 1,97,46,57,138 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,44,788 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here