ஆப்பிள் நிறுவனம்ஐபோன் 11சீரிஸ் மற்றும் ஆப்பிள்வாட்ச்சீரிஸ் 5 மாடல்களுக்கானமுன்பதிவுகளைஆரம்பித்துள்ளது. இந்தியாவில் முன்பதிவினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம். ஐபோன்11 சீரிஸில் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய ஆப்பிள் சாதனங்களை முன் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு மாத தவணை முறை சேவையை பயன்படுத்தும்போது ரூ. 6,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடியும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது ரூ. 4,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 11 ஸ்மார்ட்போன்-ஐப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன் பதிவு செய்து கொள்ளலாம். இதன் ஆரம்ப விலையாக  64 ஜி.பி.மாடலுக்குரூ. 64,900 என்றும் 128 மற்றும் 256 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 69,900 மற்றும் ரூ. 79,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ப்ளிப்கார்ட், அமேசான்மற்றும்பேடிஎம்மால்தளங்களில்ஐபோன் 11 ப்ரோமாடலையும்முன்பதிவுசெய்யலாம். இதன்ஆரம்பவிலைரூ. 99,900 ஆகும். இதன் 256 மற்றும் 512 ஜி.பி. மாடல்கள்முறையேரூ. 1,13,900 மற்றும்ரூ. 1,31,900 க்கும் கிடைக்கும்.

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் ஆரம்ப விலை ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 256 மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,23,900 மற்றும் ரூ. 1,41,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடலை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன் பதிவு செய்யலாம். இதன் துவக்க மாடலான 40 எம்.எம். ஜி.பி.எஸ். விலை ரூ. 40,900 க்கும் 44 எம்.எம். ஜி.பி.எஸ். விலை ரூ. 43,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இத்துடன், 40எம்.எம். ஜி.பி.எஸ். + செல்லுலார் ரூ. 49,900, 44 எம்.எம்.ஜி.பி.எஸ்.+ செல்லுலார் ரூ. 52,990,  40எம்.எம்.ஜி.பி.எஸ்.+ செல்லுலார் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரூ. 65,900, 40எம்.எம்.ஜி.பி.எஸ்.+ செல்லுலார் மிலானி ஸ்லூப் ரூ. 69,900, 44எம்.எம்.ஜி.பி.எஸ்.+ செல்லுலார் மிலானி ஸ்லூப் விலை ரூ. 73,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி ஆரம்பிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here