இந்தியாவுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கான ஆய்வுகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டில் இந்த ஸ்கூட்டர் புரோட்டோடைப் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு பிறகு நாட்டின் சாலைகளில் அது சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அப்போது கிடைக்கும் முடிவுகளை வைத்து மின்சார ஸ்கூட்டரின் கட்டமைப்பு, செயல்திறனை சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்காக மாருதி சுஸுகி கார் தயாரிப்பு நிறுவனத்தை ஒத்துழைப்பை நாடியுள்ளது சுசூகி. சுசூகிக்கு கீழ் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன தயாரிப்பு பிரிவான ‘சுசூகி மோட்டார்சைக்கிள்ஸ்’ நிறுவனம் தான் இந்த மின்சார ஸ்கூட்டருக்கான உற்பத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இதுதொடர்பாக பேசிய சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் சத்தோஷி உஷிடா, மாருதி சு சுசூகியின் மின்சார வாகன பயன்பாட்டை எங்களால் பயன்படுத்த முடியும். மேலும், மாருதி சுசூகி மின்சார கார்களுக்காக அமைக்கும் சார்ஜிங் ஸ்டேஷனையும் எங்களால் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், மாருதி சுசூகி நிறுவனத்திற்கு வழங்கப்படும் உதிரிபாகங்களை தங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள சுசூகி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் தயாரிக்கும் மின்சார வாகனங்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வர இயலும்.

மேலும், இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பு உடனடியாக வெற்றி அடைந்து விடாது என்பதை சுசூகி நிறுவனம் உணர்ந்தாலும் தற்போது உருவாகி வரும் போட்டியை சாமாளிக்க மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத்  தள்ளப்பட்டுள்ளது. இதனால் முதல் இரண்டு வாகனங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாது என்று சுசூகி கூறுகிறது.

ஆனால் நடைமுறை சிக்கல்களை கடந்து அந்த வாகனங்களின் புதிய தலைமுறை மாடல்கள் குறிப்பிட்ட வரவேற்பை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாகும் என சுசூகி நம்பிக்கை தெரிவிக்கிறது.

சுசூகியின் இந்த திட்டத்தை முடிவு செய்ததற்கு முழு முதற் காரணம் பஜாஜ் சேடக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். வரும் ஜனவரி மாதம் விற்பனைக்குவ் வரவுள்ள இந்த ஸ்கூட்டர், வாடிக்கையாளர்களிடம் மின்சார வாகனங்கள் மீதான மோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here