நாட்டில் இதுவரை 189.48 கோடி கொரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை (மே-04) இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை) 2,31,86,439 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 1,89,48,01,203 (189.48 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 2,95,09,889-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. மேலும் 80,40,467 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளன. 

18-59 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் 5,85,57,194 ஆகவும், இரண்டாவது டோஸ் 4,26,56,237 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,802 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,25,44,689 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,509 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில்  0.05 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.74 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 3,27,327 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 83,89,55,577 (83.89 கோடி) கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here