இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாகவும் , ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும் முன்னாள் நிதி
அமைச்சர் யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா , வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் ஃபோனில் கலந்து பேசினார். அப்போது 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட அவசர நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத அவசர நிலை நாட்டில் நிலவுகிறது என்றும் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்றும் அரசியலமைப்பை மதிப்பதில்லை என்றும் கூறினார்.

நவம்பர் 8, 2016 அன்று அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அமித் ஷாவுக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கியில் செல்லாமல் போன ரூ. 500 , ரூ. 1000 நோட்டுகள், 5 நாட்களில் ரூ.745 கோடி டெபாஸிட் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து இந்த அரசு எந்த விசாரணைக்கும் உத்தரவிடாது என்றும் அமித் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து யார் விசாரணைக்கு உத்தரவிடுவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் சார்ந்தவர்களின் வழக்குகள், மற்றவர்களின் வழக்குகளுக்கு விசாரணைக்கு உத்தரவிடுவார்கள் . ஆனால் அரசில் இருப்பவர்களுக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிட மாட்டார்கள்.

நீதித்துறையில் எதுவும் சரியில்லை என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளர். எனவே, இந்த அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு எதிராக மக்கள் தெருக்களில் வந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த அறிவிக்கப்படாத அவசர நிலை திடீரென்று வரவில்லை. இந்த அறிவிக்கப்படாத அவசர நிலையானது இந்திராகாந்தி 1975 இல் அறிவித்த அவசர நிலையை விட மிக மோசமானது என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here