இந்தியாவில் அறிமுகமான OnePlus Buds Z Steven Harrington Limited Edition

0
161

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் அமெரிக்க வடிவமைப்பாளர் ஸ்டீவன் ஹாரிங்டனுடன் கூட்டு சேர்ந்துள்ளது. 

புதிய லிமிடெட் எடிஷன் இயர்பட்ஸ் ஸ்டீவன் ஹாரிங்டன் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் டிசைன்கள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய தோற்றம் தவிர லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் எந்த மாற்றமும் பெறாமல் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்பட் 40 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கிறது.

இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் டூ-டோன் பர்ப்பிள் மற்றும் மிண்ட் நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இதற்கு ஏற்ற நிறத்தில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here