போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது இகோஸ்போர்ட் எஸ்இ மாடலை அறிமுகம் செய்தது.

போர்டு இந்தியா இகோஸ்போர்ட் எஸ்இ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் விலை முறையே ரூ. 10.49 லட்சம் மற்றும் ரூ. 10.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய மாடலின் வெளிப்புறம் டெயில் கேட் பகுதியில் மவுன்ட் செய்யப்பட்டு இருந்த ஸ்பேர் வீல் நீக்கப்பட்டு, பூட் பகுதியில் நம்பர் பிளேட் உள்ளது. இதன் அம்சங்கள் டைட்டானியம் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பன்ச்சர் சரி செய்வதற்கான கிட், சன்ரூப், சின்க் 3 இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

போர்டு இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 121 பிஹெச்பி பவர், 149 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 99 பிஹெச்பி பவர், 215 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here