சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் 48 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்களை கொண்டிருக்கிறது.

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் அம்சங்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் பின்புறம் புது பேனல் டிசைன், 48 எம்பி சாம்சங் ISOCELL GM2 சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.4 இன்ச் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா உள்ளது.

 கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்க்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஆர்க்டிக் புளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இவ்விழாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய சாதனங்கள், கேலக்ஸி வாட்ச் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here