ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.64 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9ஆர்.டி. அம்சங்கள்

– 6.62 இன்ச் 1080×2400 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்

– அட்ரினோ 660 ஜி.பி.யு.

– 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

– 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 11

– டூயல் சிம்

– 50 எம்.பி. பிரைமரி கேமரா

– 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா 

– 2 எம்.பி. மேக்ரோ கேமரா

– 16 எம்.பி. செல்பி கேமரா

– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 

– யு.எஸ்.பி. டைப் சி

– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 65 வாட் வார்ப் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் 

ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் நானோ சில்வர் மற்றும் ஹேக்கர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. + 128 ஜி.பி. விலை ரூ. 42,999 என்றும் 12 ஜி.பி + 256 ஜி.பி. விலை ரூ. 46,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 17 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான், ஒன்பிளஸ் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here