இந்தியாவில் அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று: இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்

CORONAVIRUS triggers a range of flu-like symptoms but up to 80 percent of people afflicted with COVID-19 show mild or no signs of infection, a doctor has claimed

0
266

இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 543 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் கொரோனா அறிகுறிகள் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் இது மிகவும் கவலைக்குரியது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ்தொற்றுப் பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு தொற்றின் அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அதேபோன்று, டெல்லியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொரோனா உறுதியான 186 பேருக்கும் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றின் அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர்கள் தெரிவித்திருந்தனர்.

மகாராஷ்டிராவில் 70 முதல் 75 சதவீதம் பேருக்கு தொற்றின் அறிகுறிகள் இல்லையெனவும் அதே போன்று, டெல்லியில் நேற்று கொரோனா உறுதியான 186 பேருக்கும் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here