இந்த வார பட்ஜெட் அறிவிப்புகளின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. அதனைச் செய்வது எளிமையானது அல்ல. நாட்டின் வேலையின்மை விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் வேலையின்மை பற்றி ஆய்வு செய்த கிரேக் ஜெஃப்ரி மற்றும் ஜேன் டைசன் ஆகியோர், இந்தியாவில் வேலையின்மையின் தன்மை குறித்து எழுதியுள்ளனர்.

2000-களின் நடுப்பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டில் உள்ள கல்லூரியொன்றில் மாணவர்கள் குழு ஒன்று, தங்களை “முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இல்லாத தலைமுறை” என நகைச்சுவையாக குறிப்பிட்டனர்.

பல ஆண்டுகளாக அரசாங்க வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பலனற்ற முயற்சிகளால் சோர்வடைந்த அவர்கள், தங்கள் கிராமப்புற வீடுகளுக்கும், நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் கனவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். வேலையில்லா திண்டாட்டம் அவர்களை உதவியற்றவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் ஆக்கிவிட்டது.

“பொழுதுபோக்குவதே எங்களின் வாழ்க்கையாகிவிட்டது,” என்று அவர்கள் கூறினார்கள்.

கடந்த இரண்டு வாரங்களில், இந்தியாவின் வேலைவாய்ப்பு நெருக்கடியின் அளவு மிகத் தெளிவாகத் தெரிந்ததால், இந்தியாவில் உள்ள “வேலையில்லா இளைஞர்கள்” குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களின் கவனமும் அதன் மீது திரும்பியுள்ளது.

அதிகம் படித்த ஆனால் தகுதிகேற்ப வேலை கிடைக்காத பல லட்சக்கணக்கான இளைஞர்கள், ஆசியா அதிக இளைஞர்களின் மக்கள் தொகையால் நன்மை அடைகிறது என்ற கருத்துக்கு சவாலாக உள்ளனர்.

2000-களின் நடுப்பகுதியில் தெளிவாகத் தெரிந்த வேலையில்லாப் பிரச்னை, அந்தக் காலக்கட்டத்திலிருந்து கணிசமாக அதிகரித்துள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய கவலை தீவிரமடையும்போது, ஊடகங்களின் வெளிச்சம் தவிர்க்க முடியாமல் உரத்த ஆர்ப்பாட்டங்களுக்கும் அரசியல்வாதிகளின் பிரசார பேச்சுகளுக்கும் இடையே ஊசலாடுகிறது.

உத்தரபிரதேசத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக காத்திருக்கும் பெண்கள்
உத்தரபிரதேசத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக காத்திருக்கும் பெண்கள்

ஆனால் நாம் நமது கண்ணோட்டத்தை மாற்றி, வேலையில்லா இளைஞர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என்ற ஒரே மாதிரியான கருத்தை தள்ளி வைத்துவிட்டால், இந்தியாவில் தினசரி அளவில் இளைஞர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எப்படி தங்கள் நேரத்தை செலவழிக்கிறார்கள்? அவர்கள் எப்படி தங்கள் சமூகங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்கின்றனர்? இந்தியாவை அவர்கள் எப்படி மாற்றுகிறார்கள்? போன்ற கேள்விகளை கேட்க முடியும்.

கடந்த 25 ஆண்டுகளாக, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்களின் அனுபவங்கள் மற்றும் செயல்கள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். இந்த ஆராய்ச்சி உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்திலும், உத்தரகாண்டில் உள்ள சாமோலி மாவட்டத்திலும் பல ஆண்டுகளாக வேலையில்லாத இளைஞர்களுடன் வாழ்ந்தும் அவர்களுடன் பணி செய்தும் மேற்கொள்ளப்பட்டது.

சமூக அவலத்தின் ஆழம் வியக்க வைக்கிறது. வேலையில்லாத இளைஞர்கள் ஏமாற்றங்களைச் சந்திக்கிறார்கள். அவர்களிடம் பணம் இல்லை, குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது, பெரும்பாலும் மரியாதை கிடைப்பதில்லை, மேலும் அவர்களின் திருமண வாழ்க்கையை நிர்வகிப்பதில் அடிக்கடி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

ஆண்களை பொறுத்தவரை நிரந்தர பணி இல்லை என்றால், அவர்கள் குடும்பத்தின் பணம் ஈட்டும் நபர்கள் என்ற பெயரை இழக்கிறார்கள். அதேபோல கல்வி கற்ற நேரத்தையும், வேலை வாய்ப்புக்காக அலைந்த நேரத்தையும் எண்ணி அவர்கள் நொந்து கொள்கின்றனர்.

வேலையும் குடியுரிமையுடன் தொடர்புடையது. பல இளைஞர்கள் தங்கள் பதின்வயது மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் அரசாங்க சேவையில் வேலைகளைப் பெறுவதன் மூலம் தேசத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று கனவு காண்கின்றனர். ஆனால் அரசாங்க வேலைகளைப் பெறுவது ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் கடினமாகிவிட்டது.

இளைஞர்கள் போராட்டம்
வேலையின்மைக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெறுகின்றன.

வேலையில்லாத இளைஞர்கள் பலர், குறிப்பாக ஆண்கள், தங்களை “ஒன்றும் செய்யாதவர்கள்” அல்லது பொழுதுபோக்குவதில் மட்டுமே ஈடுபடுபவர்கள் என்று விவரித்துக்கொண்டு இழிந்தவர்களாகவும், ஒதுங்கியவர்களாகவும் மாறிவிட்டனர் என்பது சிறிய ஆச்சரியம். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இல்லாத தலைமுறை எங்கும் உள்ளனர் என தெரிகிறது.

ஆனால் வேலையில்லாதவர்கள் மற்றும் தகுதிக்குக் குறைவான வேலையில் இருப்பவர்கள், “எதுவும் செய்யவில்லை” என்ற சுய-ஒழுங்குமுறைகளை முக மதிப்பில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

இளைஞர்கள் பெரும்பாலும் அன்றாட மட்டத்தில் தொழில் முனைவோர்களாக உள்ளனர். அவர்களின் திறன்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத, ஆனால் எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்பு உருவாகலாம் என்ற வகையிலான மாற்று வேலையைக் கண்டறிகிறார்கள்.

வேலையில்லாத மற்றும் தகுதிக்குக் குறைவான வேலையில் இருக்கும் இளைஞர்களால் செய்யப்படும் சமூக சேவையின் அளவு குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் இந்தப் பிரிவு இந்தியாவின் பொதுச்சமூகத்தின் பிரதானமாக மாறியுள்ளது.

வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள்

மிகவும் சாதாரண மட்டத்தில், இந்த இளைஞர்கள் பெரும்பாலும் சமூக மாற்றத்தின் பிரதிபலிப்பாளர்களாகவும், தன்னார்வலர்களாகவும், தங்கள் கிராமங்கள் அல்லது நகர சுற்றுப்புறங்களில் உள்ள மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் மக்களுக்கு அரசு சேவைகளை அணுக உதவுகின்றனர். தொழில்நுட்பம், சிறுகடன், மத நடைமுறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு போன்றவற்றைப் பற்றிய புதிய யோசனைகளை அவர்கள் பரப்புகின்றனர்.

சில நேரங்களில் இந்த இளைஞர்கள் போராடுகின்றனர், ஆனால் பெரும்பாலும் இந்த அணிதிரட்டல் அரசியலை விட சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பைச் சுற்றியே உள்ளது. அவர்கள் ஒரு சிறந்த கணித ஆசிரியர் அல்லது பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கின்றனர்.

வேலையில்லாத இளைஞர்கள் பலர் எங்களிடம் சொன்ன ஒரு விஷயம் என்னவென்றால், தங்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும், தாங்கள் பின் வரும் தலைமுறைக்கு உதவ முடியும் என்றனர்.

இளைஞர்கள் – பதின்வயதினர் மற்றும் பதின்ம வயதிற்கு முந்தையவர்கள் – புதிய மற்றும் அவர்களது பெற்றோர்கள் புரிந்து கொள்ள சிரமப்படும் கல்வி மற்றும் தொழில் தேர்வுகளுடன் போராடுகிறார்கள். நடுத்தர தலைமுறையினர், வேலையில்லாத அல்லது குறைவான வேலையுடைய 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், வேலை தேடும் சமீபகால போராட்டங்களுக்கு இடையில் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.

வேலை தேடும் இளைஞர்
வேலை தேடும் இளைஞர்

இதனை விவரிப்பது, இளைய தலைமுறையையோ அல்லது வேலையில்லா பிரச்னையையோ மிகைப்படுத்த அல்ல. ஆனால், இந்தியா முழுவதும் சாதாரண இடங்களில் வசிக்கும் பதின்ம வயதின் பிற்பகுதியில், இருபதுகள் அல்லது முப்பதுகளின் முற்பகுதியில் உள்ள வேலையில்லாத இளைஞர்களின் இந்திய மக்கள்தொகையின் ஆற்றல் மையத்தை ஒப்புக்கொள்வதற்காக ஆகும். இந்தியா மற்றும் உலகின் எதிர்காலப் பாதைகளுக்கு அவை முக்கியமானவை.

கொள்கை வகுப்பாளர்களிடம் கேள்வி கேட்பதற்காகவும் கூட.

இந்த இளைஞர்களின் சமூகத்தை வெளிப்புற அமைப்புகள் எவ்வாறு சிறப்பாக ஆதரிக்க முடியும்? ஒருவேளை இந்தியாவின் மகத்தான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், இளைஞர்கள் தாங்கள் வழிநடத்தும் சமூக சேவையை மேற்கொள்வதற்கான கட்டமைக்கப்பட்ட வாய்ப்புகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படலாம். திறமையுடன் செயல்படும் வேலையில்லாத அல்லது குறைவான வேலையில் இருக்கும் இளைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

ஒன்று தெளிவாக உள்ளது: இளைஞர்களே இத்தகைய வாய்ப்புகளுக்காக மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

கிரேக் ஜெஃப்ரி மற்றும் ஜேன் டைசன் ஆகியோர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மானுட புவியியல் கற்பிக்கின்றனர். ‘Timepass: youth, class and the politics of waiting in India’ உட்பட இந்தியா பற்றிய பல புத்தகங்களை ஜெஃப்ரி எழுதியுள்ளார். டைசன் ‘Working Childhoods: Youth, Agency and the Environment in India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

Courtesy: bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here