மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் பகுதியைச் சேர்ந்த சந்தீப் ஷர்மா, தேசிய தொலைக்காட்சியொன்றில் பணிபுரிந்து வந்தார். அவர், மணல் மாஃபியாக்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்தார். இதில் போலீசாருக்கும் மணல் மாஃபியாக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பும் அம்பலமானது.

இதனையடுத்து, சந்தீப் ஷர்மாவுக்கு போலீஸ் மற்றும் மணல் மாஃபியாக்களிடமிருந்து மிரட்டல்கள் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (நேற்று) காலை, சந்தீப் ஷர்மா இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி அவரை ஏற்றியது. இதில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பான காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதில் சந்தீப் ஷர்மாவைத் திட்டமிட்டே கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய லாரி டிரைவரைக் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டியவரின் பெயர் ரன்பீர் யாதவ் என்றும், அவர் காடுபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் ரன்பீர் யாதவ், சாலையின் குறுக்கே பெண் ஒருவர் வந்துவிட்டதாகவும், அவர் மீது மோதாமல் இருப்பதற்காகவே லாரியைத் திருப்பியதாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

அதேபோன்று, பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள போஜ்பூரில், நிருபர்கள் இருவர் மீது வாகனம் மோதியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் டைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நவீன் மற்றும் அவரது சக பத்திரிகையாளர் விஜய் சிங் ஆகியோர் என தெரிய வந்தது.

பத்திரிகையாளர் நவீன்
பத்திரிகையாளர் நவீன்

இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், இது திட்டமிட்ட படுகொலை என்றும், இதன் பின்னணியில் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் முஹம்மது ஹர்சு மற்றும் அவரது மகனும் இருப்பதாகக் குற்றம் சாட்டினர். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here