இந்தியாவில் அக்டோபர் மாதம் வெளிவரும் மோட்டோ ரேசர் 5ஜி

Motorola Razr 5G India launch has been teased by the company on Twitter.

0
106

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனை ஏற்கனவே அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்து விட்டது. 

இந்த நிலையில், மோட்டோ ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்
மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முந்தைய தகவல்களில் ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறு வீடியோவையும் மோட்டோரோலா வெளியிட்டு இருந்தது.

தற்சமயம் புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி, முன்புறம் லோட் செய்யும் வசதி கொண்ட வாஷிங் மெஷின் மற்றும் இரண்டு கதவுகள் கொண்ட குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றையும் மோட்டோரோலா அறிமுகம் செய்ய இருக்கிறது.

மேலும் இவை அனைத்தும் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என டீசரில் தெரியவந்துள்ளது. புதிய மோட்டோ ரேசர்போன் தவிர ஸ்மார்ட் டிவி, குளிர்சான பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மோட்டோ ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை $1,399.99(தோராயமாக ரூ. 1.03 லட்சம்) ஆகும். இது ப்ளஷ் கோல்ட்(Blush Gold), பாலிஷ் கிராஃபைட்(Polished Graphite) மற்றும் திரவ மெர்குரி(Liquid Mercury) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here