இந்தியாவில் ஃபோக்ஸ்வாகன் I.D.Crozz மின்சார கார் அறிமுகம்

ID. Crozz's battery can be charged up to 80 per cent in around 30 minutes and offers a driving range of 500 km

0
174

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ஃபோக்ஸ்வாகன் I.D.Crozz முதன்முறையாக இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இது ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டால் அதிகபட்சமாக 500 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாகும். வரவுள்ள ஐடி. கிராஸ் காரில்  83kWh லித்தியம் ஐயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முன்புற சக்கரங்களுக்கு 102hp பவர் மற்றும் 140Nm டார்க் வெளிப்படுத்தும் மின்சார மோட்டார் மற்றும் பின்புற சக்கரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 204hp பவர் மற்றும் 310Nm டார்க் வெளிப்படுத்தும். ஆகவே, ஐடி.கிராஸ் மின்சார காரின் அதிகபட்ச பவர் 306hp மற்றும் 450Nm டார்க் கொண்டிருக்கும்.

I.D. Crozz மின்சார எஸ்யூவி காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஃபோக்ஸ்வேகன் I.D. Crozz இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here