இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் இமாமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் தொழுகைப் பள்ளிகளில், வழக்கமாக ஆண் இமாம்களே தொழுகை மற்றும் பேருரைகளை நிகழ்த்துவார்கள். இந்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தின் செருகோடு பகுதியில், குர்ஆன் சுன்னத் ஜமாத் ஆதரவுடன் ஜமிதா (34) என்னும் பெண், ஜூம்மா தொழுகைக்கு இமாமாக இருந்து குத்பா என்னும் மார்க்கப் பேருரை மற்றும் தொழுகையும் நடத்தினார்.

இது குறித்து பேசிய ஜமிதா, ”நாங்கள் குர்ஆனைப் பின்பற்றுகிறோம். ஆண்களும், பெண்களும் சமம் என குர்ஆன் கூறுகிறது. இருவருக்குமிடையே வேறுபாடு காட்டக்கூடாது எனவும் வலியுறுத்துகிறது.” என்றார்.

பெண் ஒருவர் இமாமாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்