கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

2018 டிசம்பர் மாதத்துக்குள் கிராமத்தில் உள்ள 7,800 பெண்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டுவிடும். அதன்பின் நாட்டிலேயே முதல் முதல்முறையாக, தற்காப்பு கலைப் பயிற்சி முழுமையாகப் பெற்றுள்ள கிராமம் என்ற பெருமையை கங்காழா பெறும்.

2017-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நிர்பயா திட்டம் மூலம் கிடைத்த நிதியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் கிராமத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 7,800 பெண்களுக்குக் கராத்தே, ஜூடோ, கேரள பாரம்பரிய தற்காப்புக் கலை உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கத் திட்டமிடப்பட்டது.

பெரும்பாலான பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் 2 ஆயிரம் பெண்கள் மட்டுமே பயிற்சி முடிக்கும் தருவாயில் உள்ளனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் நடுப்பகுதிக்குள் பயிற்சி முடிக்கப்படும் என்று கிராம நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

கேரள போலீஸில் இருந்து தற்காப்பு கலையில் தேர்ந்தவர்கள் 5 பேரை வரவழைத்து வாரத்தில் இரு நாட்கள் 10வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு குடும்பசிறீ அமைப்புகள் முக்கியக் காரணமாக இருந்தனர் என்று கங்காழா பஞ்சாயத்தின் தலைவர் பி. பிரதீப் கூறியுள்ளார்.

இந்தப் பயிற்சியில் பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள், துன்புறுத்தல், பஸ், பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் ஆகியவற்றைக் கூறி அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளித்தோம் என்று வைக்கம் போலீஸ் நிலையத்தின் துணை ஆணையரும், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹேமா சுபாஷ் கூறியுள்ளார்.

தாக்குதல் மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, சட்ட விழிப்புணர்வு போன்றவை இந்தப் பயிற்சியில் அளிக்கப்பட்டது தற்காப்புக் கலைப் பயிற்சியில் பெண்கள் எளிதாக நினைவு வைத்துக்கொள்ளத் தக்க பயிற்சிகள், தாக்குதல் முறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

குடும்பஸ்ரீ அமைப்பில் பணியாற்றும் எனக்கு பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது சந்திக்கும் சிக்கல்களில் இருந்தும், மிரட்டல்களில் இருந்தும் என்னைக் காத்துக்கொள்ள இந்தப் பயிற்சி தேவை என்று தற்காப்புக்கலையில் பயிற்சி எடுத்த 41 வயது பெண் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.

எந்தநேரத்திலும் யார் என்னைத் தாக்க வந்தாலும் எதிர்த்துச் சண்டையிட்டு வீழ்த்தும் நம்பிக்கை வந்துவிட்டது. கோழையாகப் பயந்து ஓடாமல், இனி துணிச்சலாக எதிர்த்துச் சண்டையிடுவோம். இனி மக்கள் எங்களை கங்காழா புலிகள் என்று அழைப்பார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.

Courtesy : The Hindu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here