மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரம். இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வார காலத்திற்குள், இந்தியாவின் மிக அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலிலும் போபால் நகரம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள் : விளையாட்டில் ஊக்க மருந்து பயன்படுத்துவதில் இந்தியா 3வது இடம்

மத்திய ரயில்வே அமைச்சகம், தூய்மை குறியிட்டின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தெலுங்கானா மற்றும் ஜம்மு ரயில் நிலையம் ஏ-1 பிரிவில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. ஏ பிரிவில் கம்மம் இரண்டாவது இடத்தையும், அகமதாபாத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள் : காவிரி மேலாண்மை வாரியம் அமையாததற்கு பாஜக காரணம் இல்லை என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, “கடந்தாண்டு முதல் ரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் இருக்கும்போது தளங்களைச் சுத்தம் செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. நடைமேடை, ரயில் பெட்டிகள், கழிப்பறை மற்றும் தண்டவாளங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : மியாமி கடற்கரையில் ப்ரியங்கா சோப்ரா வைரலான படங்கள்

இந்த தூய்மை மதிப்பீடு 407 நிலையங்களில் நடத்தப்பட்டது இதில் 75 ரயில் நிலையங்கள் ஏ-1 பிரிவிலும், மிகவும் பரபரப்பான 332 ரயில் நிலையங்கள் ஏ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்