இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் எட்டு சதவிகிதம் குறைந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது 2016ஆம் ஆண்டில் எட்டு லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் இறப்பாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு 1000 குழந்தைகளுக்கு 37 குழந்தைகள் என்றிருந்த இறப்பு விகிதம், 2016ஆம் ஆண்டில் 34ஆக, அதாவது எட்டு சதவிகிதம் குறைந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 47ஆக உள்ளது. இந்தியாவிலேயே மத்தியப் பிரதேசத்தில்தான் இதன் விகிதம் அதிகமாக உள்ளது. அதனைத்தொடர்ந்து, அஸ்ஸாம் மற்றும் ஒடிசாவில் 44ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் 43ஆகவும், ராஜஸ்தானில் 41ஆகவும் உள்ளது.

அதேபோன்று, 2016ஆம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து காணப்படும் மாநிலமாக கோவா உள்ளது. இங்கு இதன் விகிதம் 10ஆக உள்ளது. அதனைத்தொடர்ந்து கேரளா மற்றும் புதுச்சேரியில் 10ஆகவும் உள்ளது. கிராமப்புறங்களில் 38ஆகவும், நகர்புறங்களில் 23ஆகவும் உள்ளது.

Source: LiveMint

இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்ஃபோனில் செக்ஸ் படங்களைப் பார்ப்பவரா நீங்கள்? இதைக் கேளுங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்