இந்தியாவின் 75% பகுதிகளில் எமர்ஜென்சி நிலைதான் உள்ளது என பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜாராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா, காங்கிரசிலிருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

eagle

இதனால், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, உறுப்பினர்கள் 44 பேரும் பெங்களூருவில் உள்ள ஈகிள்டன் கோல்ஃப் என்னும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பொறுப்பாளராக இருந்து கவனித்து வரும், கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமாருக்குச் சொந்த வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்தி வருகின்றனர்.

beng

இந்நிலையில் இது குறித்துப் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், “மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் 75 சதவிகித பகுதிகளில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய நபர்கள் ஊழல்களில் சிக்கியிருந்தாலும் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் சிக்கிய நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்தது பாகிஸ்தான். ஆனால் இந்தியாவில் பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள ஐஸ்வர்யாராய் பச்சன், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கின் மகன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 424 பேர் மீது எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்: கேரளாவை கலக்கிய விக்ரம் வேதா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்