இந்தியாவின் 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் அதிக அளவு யுரேனியம்

0
223

இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில், நிர்ணயம் செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான அளவு யுரேனியம் கலந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .

யுரேனியத்தின் அளவு, உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கென நிர்ணயம் செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.

இந்த ஆய்வுத் தகவல் என்விரோன்மென்டல் சயின்ஸ் & டெக்னாலஜி லெட்டர்ஸ்’ (Environmental Science & Technology Letters) என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலத்தடி நீரில் யுரேனியத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதாக முதல் முறையாக வெளியாகும் ஆய்வுத் தகவல் இது .

அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் இந்தியாவின் நிலத்தடி நீரில் யுரேனியம் அதிக அளவு இருக்கிறது என்று தெரியவந்துள்ளது .

இந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில் உள்ள யுரேனியத்தின் அளவு குறித்த
தகவல்கள் தொகுக்கப்பட்டன. ராஜஸ்தான் , குஜராத்தில் உள்ள 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின்
அளவு அதிகமாக உள்ளது. இது, குடிநீரில் யுரேனியத்தின் அளவாக உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கு
நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது. ராஜஸ்தானில் உள்ள நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு அபாயகரமாக உள்ளது என்றும், ஆந்திர பிரதேசத்தில் நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகினறன.

நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுதல், நைட்ரேட் மாசு, பாறைகளில் இருக்கும் யுரேனியத்தின் அளவு, நிலத்தடி நீரில் இருக்கும் இதர வேதியியல் கூறுகளுடன் யுரேனியம் வினைபுரிவது ஆகிய காரணங்களால் நிலத்தடி நீரில் இயல்பாகவே இருக்கும் யுரேனியத்தின் அளவு உயர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக இருந்தால் நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர்த்தர கண்காணிப்பு திட்டத்தை இந்தியா மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. யுரேனியக் கலப்பு
அதிகரிப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள
வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்