இந்தியாவின் மொத்த பொதுக்கடன் 66.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் பொதுக்கடன் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் மொத்தக் கடன் 65.80 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், இந்தத் தொகை அடுத்த காலாண்டான டிசம்பரில் 66.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 1.22 சதவிகிதம் கூடிக் கொண்டே செல்வதாகவும் தெரிவித்துள்ளது. இதில் கடந்த டிசம்பரில் உள்நாட்டின் மொத்தக் கடன் 93.1 சதவிகிதமாகவும், நிதிச்சந்தையின் மொத்தக் கடன் 82.6 சதவிகிதமாகவும் உள்ளது. தெளிவான திட்டங்களும், முறையான செலவினங்களும் வகுக்கப்படாமல் இருப்பதே கடன் தொகை உயருவதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது