ஐடியா செல்லுலார் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்ததாக வெள்ளிக்கிழமை அந்நிறுவனங்கள் கூட்டாக அறிவித்தன.

இந்த இணைப்பையடுத்து புதிததாக உருவாகியுள்ள நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் இணைப்பானது 2,320 கோடி டாலர் மதிப்புடையது . இந்திய மதிப்பில் இது ரூ.1.60 லட்சம் கோடியாகும். தற்போது, இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்து இரு நிறுவனங்களும் ஒன்றாகியுள்ளன.

இணைப்புக்கு பிறகு இந்நிறுவனங்களுக்கு வோடஃபோன் ஐடியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்புதிய நிறுவனத்தின் சேவையைப் பெறும் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40.8 கோடி. ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு சேவை சந்தை பங்களிப்பில் இது 35 சதவீதமாகும்.

ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலாரின் தலைவராக இருப்பவர் குமார மங்கலம் பிர்லா. இவர்தான் தற்போது இணைப்பில் உருவாகும் புதிய நிறுவனத்துக்கும் தலைவராக இருப்பார். இந்நிறுவனத்துக்கு 12 உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர் குழுவும் இருக்கும். தலைமை நிதி அதிகாரி வோடஃபோன் சார்பில் நியமிக்கப்படுவார்.

வோடாஃபோன்-ஐடியா , புதிய நிறுவனத்துக்கு தலைமைச் செயல் அதிகாரியாக பாலேஷ் சர்மாவை நியமித்துள்ளார்கள் .

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்