இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக ஏத்தர் எஸ் 340(Ather S340) மற்றும் எஸ் 450(Ather S450) ஆகிய ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு வசதிகளை மிக உயர் ரக தொழிற்நுட்பங்களுடன் இந்த ஸ்கூட்டர் உள்ளடக்கி இருக்கிறது, இந்த ஸ்கூட்டரில் ஐபி 67 ரேட்டிங் உள்ள பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ள்து. இந்த ரேட்டிங் ஸ்மார்ட் போன்ற பேட்டரிகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும், ஸ்கூட்டர்களின் இது தான் முதல் முறை. ஐபி 67 ரேட்டிங் என்றால் அந்த பேட்டரி டஸ்ட் மற்றம் வாட்டர் ப்ரூப் கொண்டது, வேகமாக சார்ஜ் செய்யக்கூடியது.

முதலில் பெங்களூருவில் விற்பனையாகி வரும் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய பெங்களூருவில் ஆங்காங்கே சார்ஜ்ஜிங் சென்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஏத்தர் நிறுவனம் பெங்களூருவில் ஒவ்வொரு 4 கி.மீ. தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளது. இதனால் பெங்களூருவிற்குள் இந்த பைக்கை ஓட்ட எந்த வித பிரச்னையும் இல்லாமல் இருக்கும் என அந்நிறுவனத்தினர் நம்புகின்றனர். அங்கே 1 நிமிடத்திற்கு சராசரியாக 1 கி.மீ. தொலைவு செல்லக்கூடிய அளவிலான சார்ஜை ஏற்ற முடியும். பேட்டரியின் 80 சதவீதம் வரை சார்ஜ் வேகமாக ஏறிவிடும்.

oo

33224581_1119204388217809_32896026398425088_o

33299642_1119204904884424_3976638751110594560_o

நீண்ட நாட்கள் உழைக்ககூடி பேட்டரியை பயன்பத்துவதனால் இந்த பைக்கின் பெரும்பாலான விலையை பேட்டரி தான் எடுத்து கொண்டுள்ளது. இது குறைந்தது 50,000 கிலோ மீட்டர் வரை எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் என அந்நிறுவனம் கருதுகிறது.

மாதம் சுமார் ரூ 700/- சந்தா கட்டணத்தை ஏத்தர் நிறுவனம் ஏத்தர் ஒன்(Ather One) என்ற பிளானில் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸை கொடுப்பதற்கு ஆன் ரோடு விலையுடன் சேர்த்து பெற்று சர்வீஸின் போது பிரேக் பேட் மற்றும் மற்ற பாகங்கள் வாங்க வேண்டியது வந்தால் அந்நிறுவனமே அதை மாற்றி விடும். ஆனால் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் வசதியில்லாமல் ஸ்கூட்டரை குறைந்த விலையில் வாங்க முடியுமா என்ற தகவல்கள் இல்லை.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு ஸ்கூட்டரிலும் ஒரு பேட்டரி தான் பொருத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனம் கூறியபடி டெஸ்ட் செய்தால் முழு சார்ஜில் 107 கி.மீ. வரை இயங்கும். ஆனால் சாலையில் ஓட்டும் போது சராசரியாக 60 கி.மீ. மைலேஜ் தான் கிடைக்கும். எக்கோ மோடில் 75 கி.மீ. வரை கிடைக்கும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் கியர் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு ஸ்கூட்டர்களிலும் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக கூட வழங்கப்படவில்லை.

2006_668323483305904_1364188448683792449_n

இந்த ஸ்கூட்டர்களில் டச் ஸ்கிரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உ ள்ளது.7 இன்ச் வாட்டர் ப்ரூப் டச் ஸ்கிரீன் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் நெவிகேஷன், ரிமோட் டயகனஸ்டிக், சார்ஜ் ஸ்டேடஸ், ஸ்பீடோ மீட்டர், உள்ளிட்ட பல வசதிகளை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் சிம் கார்டு பொருத்தவேண்டும். அதன் மூலம் எப்பொழுதும் நெட் கனெக்ட்டிலேயே இருக்கும். மேலும் இந்த டச் ஸ்கிரின் ஸ்கூட்டர் 5 கிலோ மீட்டர் வேகத்திற்கும் அதிகமாக செல்லும் போது தானாக செயல் இழந்து விடும் வாகனம் நின்று கொண்டிருக்கும் போது மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

33224509_1119161061555475_6814562194651348992_o

ஏத்தர்(Ather) நிறுவனம் ஏத்தர் ஆப் (Ather App)ஒன்றை வழங்குகிறது. ஏத்தர் ஆப் (Ather App)மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டரில் எவ்வளவு சார்ஜ் உள்ளது, ரைடு செய்யும் முறை, வாகனத்தில் மைலேஜை அதிகப்படுத்த டிப்ஸ், செல்ல வேண்டிய ரூட்டை முன்பே பதிவு செய்வது உள்ளிட்ட சில வசதிகளைச் செய்துகொள்ளலாம்.

1918043_668323853305867_5256443223555158082_n

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதை இன்டர்நெட் மூலமே சரி செய்வதுடன் ஏதேனும் மெக்கானிக்கல் சர்வீஸ் தேவைபட்டால் ஏத்தர் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை ஸ்கூட்டர் இருக்கும் இடத்திற்கே வர வைத்து ஸ்கூட்டரை சரி செய்தும் தருகின்றனர்.

ஏத்தர் எஸ் 340(Ather S340) ரூ 1,09,750/- ரூபாய்க்கும், ஏத்தர் எஸ் 450(Ather S450) ரூ 1,24,750/- ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் இதன் விற்பனையை கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்