இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து: கமல்ஹாசன்

0
310

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து , நான் இதை இங்கே கூறுவதற்கு காரணம்  காந்தியின் சிலை முன்னால் நிற்பதால்தான் , முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடம் ஆகையால்  கூறவில்லை  என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர்தான் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே, அங்கிருந்துதான் தீவிரவாதம் ஆரம்பமானது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கமல்ஹாசன் இவ்வாறு பேசினார் . 

இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.