இந்திய பொருளாதாரம் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதம் இருக்க வாய்ப்புள்ளது எனவும், 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் 7.5 சதவிகிதமாக மேலும் வளர்ச்சி பெறும் எனவும் கூறியுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என உலக வங்கி கணித்திருந்தாலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர், மத்திய ரிசர்வ் வங்கியின் சார்பில், கே.எல்.இ.எம்.எஸ் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 0.2% சரிந்துள்ளதாகவும், பலதுறைகளிலும் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் சரிவையேக் கண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்