இந்தியாவின் பல மாநிலங்களின் வங்கி ஏடிஎம்களில், பணம் இல்லாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்தநேரத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு இல்லாமல் இருந்ததால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் பணத்திற்காக ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர். இந்நிலையில் அதேபோன்ற ஒரு சூழலை தற்போது அனுபவித்து வருவதாக வங்கி வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள பல வங்கிகளின் ஏடிஎம்களில் “பணம் இல்லை” என வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

bho

இது குறித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், கடந்த 15 நாட்களாக பணம் எடுக்க முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

telangana

அதேபோன்று, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், பல இடங்களிலும் பணம் இல்லை என அட்டை தொங்கவிடப்படுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்