அதிமுக – பாஜக கூட்டணி என்பது மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் கூட்டணியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். விழுப்புரத்தில் சிங்காரவேலர் சிலைக்கு அடிக்கல் நாட்டி, உருவப்படத்தை திறந்து வைத்து அமித்ஷா மரியாதை செலுத்தினார்.

பின்னர், விழுப்புரத்தில் ஜானகிபுரத்தில் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்; ஏழை, எளிய மக்களுக்கக்கான அரசாக மத்திய பாஜக ஆட்சி உள்ளது. நாட்டின் தொன்மையான மொழி தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. திருவள்ளுவரை பற்றிய அறியவும், தமிழில் பேசவும் விருப்பம் என பிரதமரும் தெரிவித்துள்ளார்.  

தமிழ் மண்ணில் பிறந்த பல மகான்கள், உலகளவில் பெருமையை சேர்த்தவர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை. ராணுவ பாதுகாப்பு, பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்துவது அதிமுக, பாஜக அரசுகள்.

எம்.ஜி.ஆரின் நலத்திட்டங்களை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்துகிறது. பாகிஸ்தான் முகாமுக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்கி அழித்தது மோடி அரசு. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக மோடி அரசு உள்ளது. 70 ஆண்டுகள் காங்கிரஸ் செய்யாததை 7 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here