இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 9.6 சதவீதம் சரியும் – உலக வங்கி கணிப்பு

The World Bank added that it expected growth to return to 5.4 percent in FY22, assuming COVID-19-related restrictions are completely lifted by 2022.

0
154

உலக வங்கி, தனது தெற்குஆசிய பொருளாதார நிலவர அறிக்கையை நேற்று(வியாழக்கிழமை) வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 9.6 சதவீதம் சரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி, அதன்தெற்காசிய பொருளாதாரம் குறித்த அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி, நடப்புநிதியாண்டில்,9.6 சதவீதம் அளவுக்கு சரிவு காணும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் வளர்ச்சி, 4.5 சதவீதம் மீட்சி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தை பொறுத்தவரை, வளர்ச்சி நடப்பு, 2020ம் ஆண்டில், 7.7 சதவீதம் அளவுக்கு குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் தெற்கு ஆசியாவுக்கான தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மர் கூறியதாவது:-

இந்தியாவில்நிலைமை, முன்பை விட மோசமாக இருக்கிறது. வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளின் வேகம்குறைந்துள்ளது. ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழேவாழ்பவர்களின் எண்ணிக்கை ஓராண்டில் 33 சதவீதம் அதிகரிக்கும். என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here