இந்தியர்களின் தகவல்கள்: டிக்டாக் விளக்கம்

TikTok India head Nikhil Gandhi said that the company was committed to the local data privacy and security regulations Gandhi wrote in a blog post that the company had submitted its response to the govt and was working to allay its concerns

0
157

கடந்த மாதம் 29 ஆம் தேதி, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.

இந்த தடை தொடர்பாக மத்திய அரசு அறிவித்தபோது, ‘இந்த செயலிகள்இந்திய நாடு தன் மக்களுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பு, உறுதி ஆகியவற்றைக் குலைக்கும் விதமாக செயல்படுகின்றன என்றும் தனிநபர் தகவல்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தடை செய்யப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே டிக்டாக் ஆப்,  கூகுள்பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன.

சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக கொண்டுள்ள பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான பைட்டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் செயலிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைஉத்தரவால் டிக்டாக் நிறுவனத்துக்கு 6 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் மட்டும் ரூ.44,790 கோடி வரையில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி, வலைப்பதிவில்,  டிக்டாக் நிறுவனம் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் கேட்டாலும் அந்த செயலை செய்யாது.

எங்கள் செயல்பாடுகளின் காலம் முழுவதும், பயனர்களின் பிரைவசி மற்றும் பாதுகாப்புத் தேவைகள் உள்ளிட்ட உள்ளூர் சட்டங்களுடன் இணங்குவதற்கான தெளிவான உறுதிப்பாட்டை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

மத்திய அரசிடம் எங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும், அரசுக்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here