இந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி : கமல்

Actor and Makkal Needhi Maiam (MNM) founder Kamal Haasan on Thursday announced a total compensation of Rs 1 crore to the kin of the deceased and to the injured.

0
250

இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களுக்கு கமல் இரங்கல் தெரிவித்ததோடு, அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தொடர்ந்து சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாக கருதுகிறேன். இனி போன்ற விபதுக்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த துறையும் இதில் பங்கேற்க வேண்டும். இதை வேண்டுகோளாக யாரும் நினைக்க வேண்டாம், இது நமது கடமை.

விபத்துக்கு ஏழை, பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. சுனாமி மாதிரி வந்து போய் விடும். இந்த அறைக்குள்(பிணவறை) நானும் இருக்க கூடும். நூழிலையில் உயிர் தப்பினேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்கு தான் இருந்தேன்.

ரூ.100 கோடி, ரூ.200 கோடி என மார் தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கு கூட பாதுகாப்பு தர முடியவில்லை. இது அவமானதாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிரோடு இல்லை. உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும். சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும். என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here