இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று ஷங்கர் வெளியிட்டார்.

கமல் இரு வேடங்களில் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதில் 70 வயது சேனாதிபதி என்ற சுதந்திரப் போராட்ட வீரராக கமல் ஏற்றிருந்த கதாபாத்திரம் பேசப்பட்டது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 தயாராகிறது. கமல் சேனாதிபதி கதாபாத்திரத்தை இதில் தொடர்கிறார்.

இந்தியன் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இரண்டாம் பாகத்தை லைகா தயாரிக்கிறது. முதல்பாகத்தில் ரஹ்மானின் இசையும், பாடல்களும் படத்துக்கு பலம் சேர்த்தன. ஆனால், இந்தியன் 2 படத்தில் ரஹ்மானுக்கு பதில் அனிருத் இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் என மூன்று பேர் இணைந்து இந்தியன் 2 படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார்கள்.

இந்தியன் 2 படத்துக்கு ஒளிப்பதிவு ரவி வர்மன், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். ஜாக் ஹில், றட் கிரிப்பித், பீட்டர் ஹெயின் ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளை அமைக்கிறார்கள். பாடல்களை தாமரை, விவேக் எழுதுகின்றனர். நடன அமைப்பு போஸ்கோ. கமலுக்கான மேக்கப்பை லீகஸி எபெக்ட் செய்கிறது.

பொங்கலை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஷங்கர் வெளியிட்டுள்ளார். சேனாதிபதி தனது பேவரைட் நரம்பு வர்ம அடியுடன் பர்ஸ்ட் லுக்கில் காட்சியளிக்கிறார். இம்மாதம் 18 ஆம் தேதி முதல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here