ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. கமல் நாயகன். படத்தின் போட்டோஷுட் முடிந்து, பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, படவேலைகள் தொடங்கிய நிலையில், இரண்டுமுறை பணிகள் நிறுத்தப்பட்டன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. தற்போது தயாரிப்பு தரப்பான லைகா அதில் ஒரு காரணத்தை உறுதி செய்திருக்கிறது.

இந்தியன் தாத்தாவாக நடிக்க கமலுக்கு வயதான மேக்கப் போடப்பட்டது. கமலின் முகம் இந்தியன் படத்தின் போது இருந்ததைவிட சற்று உப்பலாக இருந்ததால் பழைய இந்தியன் தாத்தாவின் முகத்தை கொண்டுவர இயலவில்லை. மேலும், மேக்கப் காரணமாக கமலுக்கு அலர்ஜி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சையும், ஓய்வும் எடுத்துக் கொள்ளவே இந்தியன் 2 பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கமலின் மக்கள் நீதி மய்யம் வருகிற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாhpத்தல், பிரசார வியூகம் என கமல் அரசியல் களத்தில் பரபரப்பாக உள்ளார். அவரால் இப்போது ஆறு மணிநேரம் மேக்கப் போடவோ நடிக்கவோ இயலாது.

யதார்த்தம் இப்படியிருக்க, மேக்கப் ஒத்துக்கலை, ஓய்வுக்காகவே இந்தியன் 2 பணிகள் நிறுத்தம் என தயாரிப்பு தரப்பு ஏன் ஒவ்வாத விளக்கம் அளிக்கிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here