இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்குகிறார், கமல் நடிக்கிறார், அனிருத் இசையமைக்க முத்துராஜ் கலை இயக்கத்தை கவனிக்கிறார். லைகா தயாரிக்கிறது. இந்தத் தகவல்கள் மட்டுமே இந்தியன் 2 படத்தைப் பொறுத்தவரை உறுதி செய்யப்பட்டுள்ளன.

கமலுடன் நயன்தாரா நடிக்கிறார், துல்கர் சல்மான் இருக்கிறார், நேடுமுடிவேணுவும் வருகிறார் என்பதெல்லாம் இன்னும் வதந்தியாகவே உள்ளன. உறுதி செய்யப்படவில்லை.

படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க சிம்புவை கேட்டிருக்கிறார்கள். நண்பன் படத்தில் ஷங்கர் சிம்புவை நடிக்கக் கேட்டு அவர் மறுத்தது நினைவிருக்கலாம். அப்போது மறுத்தவர் இப்போது ஒத்துக் கொள்வாரா என்பது கேள்விக்குறி.

சென்னையில் எளிமையாக பூஜையிட்டு அரங்கு அமைக்கும் பணியை தொடங்கியிருக்கிறார்கள். போலந்த், உக்ரைன் போன்ற வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உத்தேசித்துள்ளனர். ஆந்திராவிலும் படப்பி[டிப்பு நடைபெறும் என்கிறார்கள்.

2.0 வெளியானதும் இந்தியன் 2 படப்பிடிப்புக்கான வேலைகள் முழுவீச்சில் ஆரம்பமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here