இந்தித் திணிப்பு: அமித் ஷாவுக்கு எதிராக கொதித்தெழுந்த நெட்டிசன்கள் #தமிழ்வாழ்க #StopHindiImposition, #StopHindiImperialism,

0
1605

இந்தியாவை இணைக்கும் மொழி இந்தியாகதான் இருக்கும் என அமித் ஷா டிவிட்டரில் பகிர்ந்துள்ளதால் #StopHindiImposition, StopHindiImperialism, என்னும் ஹாஷ்டேக்குகள்  டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இந்தி  தினமான இன்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டரில் பக்கத்தில்,  “இந்தியா பல மொழிகளை கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் அதே சமயம் உலகளவில் நமது நாட்டின் அடையாளமாக ஒரே மொழி இருத்தல் வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு மொழி நம்மை இணைக்குமானால் அது இந்தி மொழியாகதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் அதிகளவில் பேசப்படுகிறது” என பதிவிட்டுள்ளார். 

வங்க மொழி, தமிழ், குஜராத்தி, கன்னடம் மொழிகள் இந்திக்கு சமமானது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளும் இந்திக்கு சமமானது 1000 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கும் வேற்றுமையில் ஒற்றுமையை நாம் மதிக்க வேண்டும் என்று ஶ்ரீவத்சா பதிவிட்டுள்ளார்.  

ஹே அமித் ஷா இது தமிழ்நாடு என்று பதிவிட்டிருக்கிறார் திராவிடன் 

இது கஷ்மீர் அல்ல தமிழ்நாடு நீங்கள் இந்தியை திணிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார் இயல்தமிழ். 

பாஜக 26.6 சதவீதம் இந்தி பேசும் சமூகம் இந்தியாவை ஆளவேண்டும் என்று நினைக்கிறது என்று பதிவிட்டுள்ளார் தி இந்தியன்  

தமிழர்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் தவிர வேறு மொழி கற்க வேண்டும் என நினைத்தால் கம்ப்யூட்டர் மொழியை படிப்பார்கள் அதனால் வாழ்க்கையில் மாற்றம் வரும் என்று பதிவிட்டுள்ளார் உமா ம்கேஷ்வரன் பி செல்வம்  

அமித் ஷா அவர்களே ஒரு நாடு ஒரு மொழி யாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தமிழை இந்தியாவின் மொழியாக மாற்றுங்கள். தமிழ்தான் பழமையான மொழி என பதிவிட்டுள்ளார் ரசோ ராண்டி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here