ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

அடுப்பில் பொங்கல் பானை வைப்பது எப்போது?

நாளை (15.1.19 – செவ்வாய்) (உத்தராயண புண்யகால தர்ப்பணம் செய்து முடித்த பிறகு) காலை 8 மணிக்குள்ளாக சூரிய சுக்ர ஹோரையில் ஸ்ரீசூர்ய நாராயணருக்கு பூஜைக்கு நிவேதனம் செய்ய, புதிய அடுப்பில் புதிய பொங்கல் பானையை வைக்க சிறப்பான நேரம். காலை 7.45 மணி முதல் 9.45க்குள் பொங்கல் வைப்பது உத்தமம்.

பூஜையை எப்போது செய்யலாம்?

15.1.19 செவ்வாய் பித்ரு தர்ப்பணம் முடிந்த பிறகு காலை 8 மணி முதல் 9.40 மணிக்குள் அல்லது பகல் 11.10 முதல் 11.40க்குள் (சூர்யோதயம் 6.40), சந்திர ஹோரையில் ஸ்ரீ சூர்ய நாராயணருககு (சங்க்ராந்தி) பூஜை செய்ய சிறந்த நேரம். மேலும் இன்று முழுவதுமே சூரியனை பூஜைகள் ஸ்தோத்ர பாராயணம் அர்ச்சனை முதலியவற்றால் ஆராதிப்பது மிகவும் சிறந்தது.

கணுப்பிடி வைப்பது எப்போது?

16.1.19 புதன்கிழமை பொங்கலுக்கு மறுநாள் சூரியோதயத்துக்கு முன்பாக அதிகாலை 5.30 மணி முதல் 6.40 மணிக்குள் சூரிய ஹோரையில் பெண்கள், தங்கள் சகோதரர்களின் நன்மைக்காக கணுப்பிடி வைக்க சிறந்த நேரமாகும்.

கோ பூஜை எப்போது?

16.1.19 புதன் மாட்டுப் பொங்கல் நாளன்று தேவேந்திரனுக்கும் பசுமாட்டிற்கும் பூஜையை காலை 9.40 மணிக்கு மேல் 10.40 க்குள் குரு ஹோரையில் செய்வது மிகவும் உத்தமமாகும்.

உத்தராயணம் புண்யகால (தை மாத பிறப்பு) தர்ப்பணம் எப்போது?

காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனையும் அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாத பிறப்பு பிதுர் தர்ப்பணத்தை செய்யவும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்