கடந்த சில மாதங்களாக பாலியல் புகார் குற்றச்சாட்டுகளை திரையுலகினர் மீது கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டிக்கு விஷால் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு வழக்கம் உள்ளது. சிலர் இதற்கு உடன்படுகிறார்கள். சிலர் முடியாது என்று சினிமாவிலிருந்தே விலகுகிறார்கள். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தன்னை பலர் வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார். கொரட்டல சிவா போன்ற முன்னணி இயக்குநர்களும் இவரது குற்றச்சாட்டுக்கு தப்பவில்லை.

தற்போது நடிகர் நானி மீது, தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். நானி இதனை மறுத்தார். நானியின் மனைவியும் அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். ஆனால், ஸ்ரீரெட்டி, ஒருவருக்கு பிறந்திருந்தால் இல்லை என்று சத்தியம் செய்யுங்கள் என்று நானிக்கு சவால்விட்டுள்ளார்.

அபிமன்யுடு சக்சஸ்மீட்டில் கலந்து கொண்ட விஷாலிடம் இதுகுறித்து கேட்டதற்கு, நானி எப்படிப்பட்டவர் என்பது எனக்குத் தெரியும். இப்போது நானியை சொன்னவர் நாளை வேறெnருவரை சொல்வார். ஸ்ரீரெட்டி இந்த பெயர் விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. அவரிடம் ஆதாரம் இருந்தால் அதைவைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என்று காட்டமாக கூறினார்.

ஸ்ரீரெட்டியுடன் தமிழ் நடிகர்கள் யாரும் இதுவரை இணைந்து நடித்ததாக செய்தியில்லை. அந்தவகையில் நம்மவர்கள் தப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்