திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தை அக்கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தரக்குறைவான கருத்தைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஹெச்.ராஜா உருவப் பொம்மையை எரித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹெச்.ராஜாவின் கருத்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஹெச்.ராஜாவின் டுவிட்டர் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியும் தரக் குறைவாக ஹெச்.ராஜாவை விமர்சித்தார். இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், ”தமிழகஅரசியல் நாகரீகமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும்என நினைக்கிறேன்.எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்ணியமாக இருக்கவேண்டும்.திமுக R S பாரதியின் கடிதம் தாய்மையைக்கொச்சைப்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத்தொன்று.தி மு க இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”